இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன். சிபிஐ விசாரணை ஆரம்பம்.

இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன். சிபிஐ விசாரணை ஆரம்பம்.
chotta rajan
மும்பை நிழலுலக தாதாவும், தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவருமான சோட்டாராஜன், கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்தோனேஷிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கடந்த ஞாயிறு அன்றே இந்தியாவுக்கு கொண்டு வர மும்பை போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் காரணமாக அங்கு விமானப் போக்குவரத்து தடைப்பட்டது. நேற்று எரிமலை சீற்றம் சரியானதை அடுத்து நேற்று இரவு 7:45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு விமானம் மூலம் சோட்டா ராஜன், டெல்லிக்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை சோட்டாராஜனை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து சென்றனர். மும்பை வெடிகுண்டு சம்பவம் உள்பட பல குற்றங்கள் குறித்து சோட்டா ராஜனை விசாரிக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளும் சிபிஐ தரப்பினர்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை ஒட்டி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Leave a Reply