“மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. தென்னாபிரிக்காவில் தமிழ் பேசிய வீரர்கள்

“மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. தென்னாபிரிக்காவில் தமிழ் பேசிய வீரர்கள்

இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த போட்டியின் கடைசி நாள் ஆகும். இன்று போட்டியின் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்தியா சற்றுமுன் வரை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக வீரர்களான முரளிவிஜய் மற்றும் ராகுல் ஆகியோர்களும் கேப்டன் விராத் கோஹ்லியும் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக தமிழக வீரர்கள் முரளிவிஜய் மற்றும் ராகுல் களத்தில் இருந்தபோது இருவரும் தமிழிலேயே ஒருவருக்கொருவர் பேசி விளையாடினர். ஒரு கட்டத்தில் “மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. என்று முரளிவிஜய், ராகுலிடம் கூறியது தெரியவந்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply