மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
Ingredients
புழுங்கலரிசி(இட்லி அரிசி )-1 கப்
பச்சரிசி-அரை கப்
துவரம் பருப்பு-அரை கப்
உளுந்தம் பருப்பு-100 கிராம்
வர மிளகாய்-6
சோம்பு-1 டேபிள்ஸ்பூன்
Method
Step 1
அடை மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்:
வெங்காயம்-3
மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
தேங்காய் துருவல்-அரை கப்
உப்பு -தேவையான அளவு
முருங்கைக்கீரை-1 கட்டு
எண்ணெய் -தேவையான அளவு
Step 2
முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
Step 3
பின்பு அரைத்து வைத்த மாவில் வெங்காயம்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து கரைத்து தோசை கல்லில் அடையாக தட்டி தேவையான அளவு எண்ணெய் வேக வைத்து எடுக்கவும்.இதோ சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை ரெடி.