முஷரப்பின் வங்கிக்கணக்கு முடக்கம். சொத்துக்கள் பறிமுதல். பாகிஸ்தான் நீதிபதி அதிரடி
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் நிலையில் இன்று அவர் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் துபாய் சென்ற முஷ்ரப் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை. வழக்குகளின் விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை
இந்நிலையில் ஆஜராகாமல் இவ்வழக்கை விசாரிக்க முடியாது என தீர்மானித்த சிறப்பு கோர்ட் நீதிபதிகள், முஷரப் தாமாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் அல்லது, அவரை கைது செய்த பின்னர்தான் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை தொடர முடியும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் முஷரப்பின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட பெஷாவர் உயர் நீதிமன்ற நீதிபதி மசார் ஆலம் மியான்கல் இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படியும் அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார்.