தேவையான பொருட்கள்:
காளான் – 1 கப் (வெட்டியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாக வதக்கி, பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு, காளானை சேர்த்து பிரட்டி, மிதமான தீயில் சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். காளான் மற்றும் குடைமிளகாய் நன்கு வெந்ததும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், குடைமிளகாய் காளான் மிளகு வறுவல் ரெடி!!!