தேவையான பொருட்கள் :
மஸ்ரூம் – 200 கிராம்
சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 2 கை (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 4
மிளகு தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை :
* ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* சிக்கன், மஸ்ரூமை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு முக்கால் பாகம் வெந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
* ப.மிளகாயை போட்டு வதக்கி (காரத்திற்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்)சிக்கனை போட்டு கலர் மாறும் வரை வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அடுத்து மஸ்ரூமை சேர்த்து சிக்கன், மஸ்ரூம் வேக சிறிது தண்ணீர்சேர்க்கவும்.
* சிக்கன், மஸ்ரூம் நன்கு வெந்தவுடன் மிளகு தூள், தனியா தூள் சேர்த்து நன்கு தொக்கு பதம் வரும்வரை வதக்கவும்.
* கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.