Ingredients
- மஷ்ரூம் -கால் கிலோ
- எண்ணெய் -தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
- வெங்காயம் -1
- ஏலக்காய் -3
- மிளகு -1 டீஸ்பூன்
- பூண்டு -3 பல்
- இஞ்சி -சிறிது அளவு
- சோம்பு – 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் -கால் கப்
- கசகசா – அரை டீஸ்பூன்
- பட்டை -2
- கிராம்பு -3
- வர மிளகாய் -3
- கொத்தமல்லி -1 ஸ்பூன்
- சீரகம் -1 டீஸ்பூன்
Method
Step 1
அரைக்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம் -1 ஏலக்காய் -3 மிளகு -1 டீஸ்பூன் பூண்டு -3 பல் இஞ்சி -சிறிது அளவு சோம்பு – 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் கப் கசகசா – அரை டீஸ்பூன் பட்டை -2 கிராம்பு -3 வர மிளகாய் -3 கொத்தமல்லி -1 ஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன்
Step 2
முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
Step 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பின்பு அதில் மஷ்ரூம் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.மஷ்ரூம் வதங்கிய பின்பு இறக்கவும் .சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி.