காளான் புலாவ்

1d1dba8c-2be6-4b99-963c-64e0d71c2666_S_secvpf

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கப்
காளான் – 1 கப்
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 50 கிராம்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – 2 பற்கள்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
சீரகம் – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 5

செய்முறை:

• அரிசியைத் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும். ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.

• பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

• காளானை விருப்பமான‌ வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் நறுக்கி வைக்கவும். இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

• ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

• தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கி அடுத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து காளான், பட்டாணி சேர்த்து வதக்கவும். இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

• எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.(பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் தேவை)

• தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.

• மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

• இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

• இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார்.

• இதற்கு தயிர், வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.

Leave a Reply