தைவான் பல்கலைகழக ஆராய்ச்சி தைவானில் உள்ள சாங் கங் பல்கலைகழக ஆய்வாளர்கள் லிங்க்ழி என்னும் காளானைப் பரிசோதித்தனர். அப்பரிசோதனையில் காளானிற்கு குடலில் உள்ள ஆரோக்கியமற்ற கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் குடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற கிருமிகள் தான் தொப்பை வருவதற்கு காரணம் என்றும் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது.
மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர். நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும்.