காளான் ரோஸ்ட்

 

22-1419231270-mushroom-roast

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்யப்பட்ட காளான் – 3/4 கப் (நறுக்கியது)

சோம்பு – 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

கெட்டியான தயிர் – 1/4 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். வாணலியில் என்ன நீர்ம நிலையில் இருக்கும் மசாலாவானது சுண்டியதும், அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி இறக்கினால், காளான் ரோஸ்ட் ரெடி!!!

Leave a Reply