தேவிஸ்ரீ பிரசாத் தந்தை திடீர் மரணம். திரையுலகினர் அஞ்சலி

தேவிஸ்ரீ பிரசாத் தந்தை திடீர் மரணம். திரையுலகினர் அஞ்சலி
sathyanand
பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களின் தந்தை சத்யானாந்த் இன்று காலை சென்னையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யானந்த் சுமார் 80க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டாமை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பெத்தராயுடு’ படம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார்.

இன்று காலை சத்யானந்த் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சத்யானந்த் அவர்களின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீபிரசாத்துக்கு திரையுலக பிரமுகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

English Summary: Music director Devi Sri Prasad father Sathyamoorthy passed away

Leave a Reply