தமிழில் மரகதமணி என்ற பெயரிலும், தெலுங்கில் கீரவாணி என்ற பெயரிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த இசையமைப்பாளர் வரும் 2016ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த கீரவாணி, “அன்னமய்யா” என்ற படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர்.
தமிழில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப்படங்களுக்கு இசைமைத்துள்ள இவருக்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருதை 1991ஆம் ஆண்டு கொடுத்து கெளரவித்தது.
நேற்று தனது ஃபேஸ்புக் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கீரவாணி தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். இவர் டிசம்பர் 8ஆம் தேதி 1989ஆம் ஆண்டுதான் முதல் பாடலை ஒலிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீரவாணியின் ஓய்வு அறிவிப்பு காரணமாக தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகினர் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.