தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீர் மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென காலமானதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரு கிடாயின் மனு என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இசையமைப்பாளர் ரகுராம் அவர்களுக்கு வயது 38 என்பது குறிப்பிடதக்கது
இந்த நிலையில் மறைந்த இசையமைப்பாளர் ரகு ரம் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்