திருப்பதி ஏழுமலையானுக்கு முஸ்லீம் பக்தர் வழங்கிய லாரி காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு முஸ்லீம் பக்தர் வழங்கிய லாரி காணிக்கை
lorry
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையாளனுக்கு தினந்தோறும் உண்டியல் மூலம் லட்சக்கணக்கான பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகள் பெருகி வரும் நிலையில் முஸ்லீம் பக்தர் ஒருவர் லாரி ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் அப்துல் கனி என்பவர் நேற்று காலை திருமலை திருப்பதிக்கு வந்து ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்ட கன்டெய்னர் லாரியை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

கோயில் முகப்பு கோபுரம் முன் இந்த லாரிக்கு பூஜை செய்யப்பட்டது. அன்னதானத்திற்கு பக்தர்கள் வழங்கும் காய்கறிகள், இந்த கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்படும் என தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்துல்கனி ஏற்கெனவே, திருமலையில் உள்ள அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனைக்கு பல்வேறு உபகரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply