கடன் நெருக்கடி காரணமாக முஸ்லீம் அமைப்புக்கு சர்ச் விற்பனை
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் பிரிஸ்டால் என்ற இடத்தில் இமாகுலேட் சபைக்கு சொந்தமான சர்ச் ஒன்று கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சர்ச் நிர்வாகத்தின் சார்பில் ஏராளமாக கடன் வாங்கி இருந்ததாகவும், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி சர்ச்சை விற்பனை செய்ய சர்ச் நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தொகையை கொடுத்து யாரும் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.
இந்த நேரத்தில் அங்கு செயல்படும் முஸ்லிம் அமைப்பு ஒன்று தேவாலயத்தை அவர்கள் கேட்கும் தொகைக்கு வாங்க முன்வந்தது. அந்த அமைப்புக்கு தேவாலயத்தை ரூ. 13 கோடிக்கு சர்ச் நிர்வாகம் விற்றுவிட்டது. ஆனால் தேவாலயத்தை முஸ்லிம் அமைப்பு வாங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.