யோகாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும். வி.எச்.பி தலைவர்

yogaநரேந்திர மோடி தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி பொறுப்பில் ஏற்றதில் இருந்தே சிறுபான்மை மதத்தினர்களுக்கு எதிராக கருத்துக்களை பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் அவ்வபோது பேசி பெரும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருவதாக புகார்கள் அடிக்கடி எழுந்துள்ள நிலையில் நேற்று வி.எச்.பி. தலைவர் ஒருவர் கூறியுள்ள கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யோகாவை எதிர்க்கும் முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க உரிமையில்லாதவர்கள் என்று வி.எச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி கூறி இருப்பதுவே சர்ச்சைக்கு காரணம் ஆகும்.

டெல்லியில் நேற்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாத்வி பிராச்சி செய்தியாளர்களிடம் பேசியபோது ”’இந்தியாவின் கலாசார, பாரம்பரியக் கலைகளில் ஒன்றான யோகாசனத்தை முஸ்லிம்கள் தாங்களாகவே முன்வந்து தெரிந்துகொள்ள வேண்டும். இதில், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

யோகாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் இந்தியாவின் உணவை சாப்பிட்டுவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என ஜனநாயகம் உங்களுக்கு (முஸ்லிம்) சொல்லிக் கொடுக்கவில்லை.

முதல் சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு, அதுவொன்றும் அரசியல் தலைவருடைய மகளின் திருமணம் அல்ல. யோகாசன நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை” என்றார்.

Leave a Reply