தேவையான பொருட்கள் :
.
மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- வெங்காயத்தை முதலில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு நன்கு சுத்தமாக கழுவிய ஆட்டிறைச்சியை, (மட்டன் கொத்துக்கறியை) தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதன்பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டுவிழுது, வெண்ணெய், பப்பாளிக்காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்புசேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் . பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
- பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மட்டன்கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.