மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்
கொத்துக்கறி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய்த்துருவல் – 2 மேசைக்கரண்டி
முட்டை – 1
பச்சை மிளகாய் – 5
பொட்டுகடலை – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – சிறிது
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 பல்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு

செய்முறை

  •     தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  •     வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  •     குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  •     இதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  •     தண்ணீர் வற்றி சுருள வதங்கியதும், அரைத்துக் கொள்ளவும்.
  •     அரைத்து வைத்துள்ள கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி , அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  •     கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும்.

 

Leave a Reply