மட்டன் வறுவல்

மட்டன் வறுவல்

தேவையான பொருட்கள் :

மட்டன்- நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
கடுகு
உப்பு
வெங்காயம்
தக்காளி
ப.மிளகாய்   
மிளகாய் தூள்
மிளகு தூள்
மஞ்சள் தூள்
க.மிளகாய்
தனியா தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து மட்டனை போட்டு வதக்கவும். மட்டன் கலர் மாறி பாதியளவு வெந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

* தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* மிளகு தூள், மஞசள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், ப.மிளகாய், கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரவும்.

* மட்டன் நன்கு வேக சிறிது தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் வற்றி நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Leave a Reply