காமிக்ஸ் மூலம் மியூச்சுவல் பண்ட் ஆலோசனைகள்
டாடா மியூச்சுவல் பண்ட் நிறுவனம் டிங்கிள் டைஜெஸ்ட் நிறுவனத் தோடு இணைந்து மியூச்சுவல் பண்ட் பற்றி 32 பக்க காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் மொத்தம் 11 கதைகள் உள்ளன. டிங்கிள் டைஜெஸ்ட் காமிக்ஸ் தொடரின் `சுப்பாண்டி’ என்ற முக்கிய கதா பாத்திரத்தை வைத்து மியூச்சுவல் பண்ட் மற்றும் முதலீட்டு ஆலோ சனைகள் பற்றி விளக்கப்பட்டுள் ளது. மேலும் மனிதனின் அன்றாட வாழ்க்கையிலிருந்து உதாரணங் களை எடுத்துக் கொண்டு இந்த காமிக்ஸ் புத்தகம் எழுதப் பட்டுள்ளது.
“சுப்பாண்டி எல்லாவற்றையும் முகமதிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடிய சாதாரண மனிதன். எங்க ளது படைப்புக் குழு மற்றும் மார்க் கெட்டிங் குழு ஆகிய இரண்டு குழுக்களும் சேர்ந்து இந்த யோசனை கொண்டு வந்தனர். சுப் பாண்டி என்ற காமிக்ஸ் கதாபாத் திரத்தை வைத்து எளிய முறையில் கருத்துகளை விளக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். சுப்பாண்டி கதாபாத்திரத்தை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும் என்றால் இந்த கருத்து களையும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். என்று கண் டண்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத் தின் தலைவர் சஞ்சய் தார் தெரி வித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான சூழ் நிலையை தொடக்கமாக கொண் டு பின்பு சுப்பாண்டி கதாபாத் திரத்தை வைத்து விளக்கி அதை நகைச்சுவை உணர்வோடு அந் தக்கதை முடிக்கப்பட்டிருக்கும். இந்தக் கதையில் எளிமையான நிதி சார்ந்த கருத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் என்று சஞ்சய் தார் தெரிவித்தார்.