கதறியழுத குழந்தைக்கு வீடியோ கால் போட்ட தாய்
இந்த கொரோனா நேரத்தில் தன்னலம் கருதாது குடும்பத்திர்களையும் பார்க்காமல் 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருப்பவர்களில் டாக்டர்கள் இன்றியமையாதவர்கள் ஆகும்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு டாக்டர் தனது வீட்டிற்குள் 15 நாட்களுக்கும் மேலாக போகாமல் மருத்துவமனையில் தொடர்ச்சியாக ஷிப்ட் முறையில் பணி செய்து கொண்டிருக்கின்றார் இவரது ஒன்றரை வயது மகன் தனது அப்பா எங்கே என கதறி அழுகும்போது அவரது தாயார் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமலும், அழுகையை பொறுக்க முடியாமல் வீடியோகால் மூலம் தந்தையுடன் பேச வைத்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது என்னுடைய கணவர் கடந்த 15 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை ஒவ்வொரு இரவும் எனது மகன் அப்பா எங்கே என்று கதறி அழுத போது என்னால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவருடன் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்த பின்னரே எனது மகன் சமாதானம் ஆனான் என்று கூறியுள்ளார். குடும்பத்தை பிரிந்து தன்னலம் கருதாமல் பணி செய்துவரும் டாக்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது