சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் எப்பொழுது ரிலீஸாகும் என தெரியாத நிலையில், அந்த படத்தின் இயக்குனர் விஜய் சந்தர், தன்னுடைய அடுத்த படம் தல அஜீத் அல்லது தளபதி விஜய்யுடன் தான் என சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
என்னுடைய வாலு படம் ஒரு மாஸ் படம். இந்த படம் வெளிவந்தால் சிம்பு மட்டுமின்றி எனக்கும் மாஸ் இயக்குனர் என்ற பெயர் கிடைக்கும் என்பதால் ஒருசிலர் இந்த படத்தை வெளிவரவிடாமல் சதி செய்கின்றனர். ஆனால் தடைகளை உடைத்து இந்த படம் விரைவில் வரும்.
‘வாலு’வை அடுத்து ஒரு மாஸ் திரைக்கதை கைவசம் வைத்துள்ளேன். இந்த கதையில் அஜீத் அல்லது விஜய் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும். அவர்களிடம் கதையை கூறி நடிக்கும்படி கேட்பேன். அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த கதையை வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
‘வாலு’ படத்தில் சிம்புவுக்காகவே பல வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த படத்தின் வசனங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று விஜய் சந்தர் மேலும் கூறியுள்ளார்.