மணிப்பூர் எல்லையை மூடி மியான்மர் ராணுவம் அராஜகம். எல்லையில் பதட்டம்

மணிப்பூர் எல்லையை மூடி மியான்மர் ராணுவம் அராஜகம். எல்லையில் பதட்டம்

மணிப்பூர் எல்லையில் உள்ள இந்திய கிராமத்துக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதோடு இந்திய மியான்மர் எல்லை கதவுகளையும் மியான்மர் ராணுவம் இழுத்து மூடியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக மணிப்பூர் எல்லைப்பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் மியான்மர் தற்போது உச்சகட்டமாக மணிப்பூர் அருகே எல்லையை மூடியுள்ளது. எல்லை அருகே உள்ள ஹலோன்பாய் என்ற கிராமத்தையும் சேர்த்து மணிப்புர் மூடியுள்ளதால் அப்பகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர்.

மூடிய எல்லை பகுதி அருகே மணிப்பூர் மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் இருநாட்டு எல்லையில் பதட்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இருநாடுகளின் போக்குவரத்து, வர்த்தம் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் இருநாட்டு தலைவர்களும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அம்மாநில மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply