மியான்மர் பொதுத்தேர்தல். ஆங் சான் சூகியின் வேட்பாளருக்கு கத்திக்குத்து
மியான்மர் நாட்டில் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கியே தீர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின்போது கத்தியால் குத்தப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் 25 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு பின் விடுதலையான ஆங் சான் சூகி அவர்களின் ஜனநாயக தேசிய லீக் வேட்பாளரும் நடப்பு எம்.பி.யுமான நயிங் நிகன் லின் என்பவர் நேற்று மாலை யாங்கோனின் தார்கேடா என்ற பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டபோது திடீரென அவர் முன் தோன்றி ஒரு மர்ம நபர், லின்னை கத்தியால் தாக்கியுள்ளார். இதில், லின் காயமடைந்தார். தடுக்க முயன்ற அவரது கட்சி உறுப்பினர்கள் மூன்று பேரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மற்றொரு வேட்பாளர் தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி போட்டியிடுவதால் அவருடைய வெற்றி உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
English Summary : Myanmar opposition candidate hurt in knife attack on rally