இன்று வெளியாகிறது மியான்மர் தேர்தல் முடிவு. ஆங் சாங் சூ கியூ-வின் கட்சி வெற்றி பெறுமா?
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மர் நாட்டில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
664 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 90 கட்சிகளை சேர்ந்த சுமார் 6,000 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் யு.டி.எஸ்.பி. கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ-வின் என்.எல்.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இன்று மாலைக்குள் மியான்மரில் புதிய ஆட்சியை அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் எதிர்க் கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூவின் என்.எல்.டி. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[carousel ids=”75448,75449,75450,75451,75452,75453,75454,75455,75456,75457″]