வெற்றி பெற்ற சூகியின் கட்சிக்கு அதிகாரத்தை ஒப்படைக்குமா ராணுவம்? மியான்மர் நிலவரம்
சமீபத்தில் நடைபெற்ற மியான்மர் நாட்டின் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங் சான் சூகியின் எதிர்க்கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இன்னும் சில நாட்களில் இக்கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில் ராணுவ ஆதரவில் ஆட்சி செய்து வரும் தற்போதைய அதிபர், தெயின் செயின் அவர்கள், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதில் எவ்வித தயக்கமும் தனக்கு இல்லை என்றும், அதே நேரத்தில் ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தவறுகளை சுட்டிக்காட்டும் இடத்தில் தங்கள் கட்சி செயல்படும் என்றும் கூறியுள்ளார்
மியான்மர் நாட்டின் தேர்தல் முடிவுகள் ராணுவத்தின் ஆதரவுக் கட்சிக்கு எதிராக வந்துள்ளதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சூகியின் கட்சிக்கு அதிகாரங்களை, அதிபர் ஒப்படைப்பாரா என்ற சந்தேகம் உலக நாடுகளிடையே நிலவி வந்தது. ஆனால் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைநகர் ரங்கூனில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிபர் தெயின் செயின், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக தேசிய லீக் கட்சியிடம் அனைத்து அதிகாரங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும் என கூறினார்
வெற்றி பெற்ற கட்சி ஜனநாயக கடமையை ஆற்றும் அதே நேரத்தில், தவறுகளை சுற்றிக்காட்ட வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாகவும் தெயின் செயின் தெரிவித்தார். ஆங் சாங் சூகியின் ஆதரவாளர் விரைவில் அதிபர் பொறுப்பேற்பார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary: Myanmar president ‘will hand power’ to Suu Kyi after poll