மியான்மர் பொதுத்தேர்தலில் ஆங் சான் சூச்சி போட்டி. வேட்புமனு தாக்கல் செய்தார்

myanmarமியான்மர் நாட்டில் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்தலில் மியான்மர் நாட்டு மக்களுக்காக சுமார் 20 வருடங்கள் சிறையில் இருந்த தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார். அவர் மட்டுமின்றி அவருடைய கட்சியினர் இந்த தேர்தலில் 498 பாராளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். இம்முறை சூச்சி ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெற இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், காமு தொகுதியில் போட்டியிட உள்ள ஆங் சான் சூச்சி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தபோதிலும் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றவில்லை.

1990ல் நடைபெற்ற மியான்மர் அதிபர் தேர்தலில் ஆங் சான் சூ வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் முடிவுகள் ராணுவ ஆட்சியாளர்களால் ஏற்கப்படவில்லை. வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூச்சி பிறகு விடுவிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி போட்டியிட அனுமதிக்கப்படாததால், தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply