வன்முறை செய்த காவலர்களுக்கு தண்டனை. மைலாப்பூர் துணை ஆணையர் ஒப்புதல்

வன்முறை செய்த காவலர்களுக்கு தண்டனை. மைலாப்பூர் துணை ஆணையர் ஒப்புதல்

இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒருவாரமாக எந்தவித வன்முறையும் இன்றி நடந்து வந்த நிலையில் கடைசி தினத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் தமிழக மக்களுக்கு காவல்துறை மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது.

இந்த வன்முறைக்கு காவல்துறையும் ஒரு காரணம் என்ற கருத்து பரவி வரும் நிலையில் மகேஷ் என்பவர் தனது ஃபேஸ்புக்கில், ‘மெரினாவில் ஆறு நாட்கள் பொறுமை காத்து, ஆதரவளித்த காவல்துறை கடைசி நேரத்தில் அதிரடி காட்ட வேண்டிய அவசியம் என்ன. சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதைத் துடைக்க வேண்டுமென்றால் தவறு செய்த காவலர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மகேஷின் இந்தக் கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக்கில் பதில் கமென்ட் செய்துள்ளார். இதனால் ஆட்டோவுக்கு தீவைத்த காவலர்கள் உள்பட வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply