முதல்வருக்கு எதிராக வாக்களிப்பேன். மைலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ்
தமிழக முன்னாள் டிஜிபியும், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.நட்ராஜ் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தற்போது வரை நடுநிலையாக இருப்பதாகவும், விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க போவதாக ஆர்.நட்ராஜ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும், நேற்று பதவியேற்பு விழாவின் போது 100 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. எனவே நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.