பூமியை நோக்கி வரும் 7 அடி நீள விண்கல். பூமி அழியும் என வதந்தி
விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் பல மிதந்து கொண்டிருக்கின்றன. அவை அவ்வப்போது புவி மண்டலத்துக்குள் ஊடுருவி, ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்கி ஒருசில சேதங்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான விண்கற்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுவதும் உண்டு. ஒருசில விண்கற்கள் பல சிறிய துண்டுகளாக நொறுங்கி பூமியில் சிதறுவது உண்டு. இதனால் ‘பூமிக்கு ஆபத்து’ என அவ்வப்போது தகவல்கள் வரும்.
இந்நிலையில் தற்போது வேற்று கிரகத்தில் இருந்து ஒரு மர்ம பொருள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த விண்கல் விரைவில் பூமி மீது விழுந்து உலகம் அழியும் என்றும் வதந்தி தற்போது பரவியுள்ளது.
இதுகுறித்து ஒரு இணையதளத்தில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம பொருள் வருகிற நவம்பர் 13ஆம் தேதி பூமியில் வந்து மோதும் என்றும் 7 அடி நீளமுள்ள அப்பொருள் மோதுவதால் அன்றைய தினமே உலகம் அழியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி பாய்ந்து வரும் அந்த மர்ம பொருளுக்கு ‘டபிள்யூ. எப். 1190 எப்’ என பெயரிடப்பட்டுள்ளது. வேற்று கிரகவாசி தயாரித்துள்ள அப்பொருள் இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பகுதியில் விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Mysterious Chunk of Space Trash is on a Collision Course With Earth