தைவான் மீன்பிடி கப்பல் திடீர் மாயம். கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதா?

taiwan shipகடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மாயமான மலேசிய விமானம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் தற்போது கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தைவானை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று 49 ஊழியர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து திடீரென  மறைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதிக்கு பின்னர் அந்த கப்பலின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அந்த கப்பல் என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் தைவான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானை சேர்ந்த கப்பல்கள் அட்லாண்டிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க போவது வழக்கம். அப்படி 49 பேருடன் போன கப்பலில் இருந்து கடைசியாக “கப்பளுக்குள் தண்ணீர் கசிவதாக” தகவல் கிடைத்தது. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 11 பேர், இந்தோனேஷியாவை சேர்ந்த 21 பேர், பிலிப்பைன்சை சேர்ந்த 13 பேர், 2 வியட்நாம் நாட்டவர்கள் மற்றும் தாய்வான் கப்பலின் கேப்டன் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு வேளை கப்பல் தண்ணீரில் ழூழ்கியிருந்தால், கப்பலில் இருந்து தானாகவே தகவல் கிடைக்கும்படியான தொழில்நுட்பம் இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. எனவே கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கப்பல் காணாமல் போன உடனே அத்தகவல் ஏன் வெளியே சொல்லப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அரசுகளிடம் கப்பலை கண்டுபிடிக்க உதவுமாறு தைவான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply