ராஜபக்சேவை எதிர்த்து அவரது மந்திரியே போதுவேட்பாளராக போட்டி. பெரும் பரபரப்பு.

rajapakseஇலங்கை அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடப்போவதாக ராஜபக்சே மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் மைத்ரிபாலா சிறீசேனா நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ராஜபக்சே அரசு சர்வாதிகார போக்கில் தவறான பாதையில் சென்று வருவதாகவும், ஒட்டுமொத்த இலங்கையை ராஜபக்சேவும் அவரது குடும்பமும் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள  மைத்ரிபாலா சிறீசேனா, அவரை ஆட்சியில் இருந்து வீழ்த்த தான் பொது வேட்பாளராக ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்ரிபாலாவை பொதுவேட்பாளராக அறிவிக்க சம்மதித்துள்ளது. இதற்கு மைத்ரிபாலா அக்கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மைத்ரிபாலா சிறீசேனா, ‘இந்த தேர்தலில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தால் நூறே நாட்களில் அதிபரிடம் குவிந்துக் கிடக்கும் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுப்போம். சுதந்திரமான நீதித்துறை மற்றும் தேர்தல் நடைமுறைகளை உருவாக்குவோம். நாட்டில் உண்மையான பத்திரிகை சுதந்திரத்தை மீண்டும் நிர்மாணிப்போம்’ என்று உறுதியளித்தார்.

ராஜபக்சேவுக்கு அடுத்தபடியாக அவரது மந்திரிசபையில் இரண்டாவது ஸ்தானத்தில் உள்ள மூத்த அரசியல்வாதியான மைத்ரிபாலா சிறீசேனா (63), ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்குவது, ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply