எதிர்க்கட்சிகளுடன் முக்கிய ஒப்பந்தம் செய்த ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்.

srilanka electionஇலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிபர் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறீசேனா, எதிர்க்கட்சிகளுடன் நேற்று முக்கிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.

நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், புத்த மத மூத்த துறவி மதுலுவாவே சோபிதா, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சிறீசேனா முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தத்தின்போது, முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்கா அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த முக்கிய ஒப்பந்தத்தில், இலங்கையில் “சர்வாதிகாரம் வாய்ந்த’ அதிபர் முறையிலான ஆட்சியை உடனடியாக  நீக்குவது, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 18ஆவது திருத்தத்தை செல்லாதாக்குவது,  இலங்கையில் சிறந்த ஜனநாயக ஆட்சி ஏற்படுவதற்கு வழிவகை செய்வது, தேர்தல் முறையிலும், அரசமைப்பு ரீதியிலும் சீர்திருத்தம் மேற்கொள்வது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply