புதுச்சேரியில் அதிமுக வேட்பாளருக்கு குவியும் ஆதரவு. நாராயணசாமி பதவி தப்புமா?

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளருக்கு குவியும் ஆதரவு. நாராயணசாமி பதவி தப்புமா?

narayanasamyகடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்+திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், எம்.எல்.ஏ பதவியில் இல்லாத நாராயணசாமியை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இதனால் ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாராயணசாமி தற்போது நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதியில் அவர் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் நாராயணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகருக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு குவிந்து வருவதால் நாராயணசாமியின் வெற்றி கேள்விக்குறி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் அவர் தனது முதல்வர் பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, நாராயணசாமியை தோற்கடிக்க முழு வேகத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் முதல்வர் ரெங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply