நாளை இடைக்காடர் ஜெயந்தி

7

நவக்கிரக நாயகருக்கு ஜெயந்தி: பதினெட்டு சித்தர்களில் ஒருவர் இடைக்காடர்.  இவர் ஒருமுறை  பஞ்சகாலத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூருக்கு வந்தார். நவக்கிரக அமைப்பு முறையை மாற்றினால், பஞ்சம் தீரும் என்ற ஞான திருஷ்டி இவருக்கு ஏற்பட்டது.  உடனே, கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்ளாமல் புதிய சன்னிதிகளை  கோவில்களில்  உருவாக்கியதால் பஞ்சம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்த்திய  இவருக்கு இடைக்காட்டூரில் கோவில் உள்ளது. அவரது ஜென்ம நட்சத்திரமான புரட்டாசி திருவாதிரையன்று குருபூஜை நடக்கிறது. ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணி<ய ஷேத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அன்று அன்னதானமும் நடக்கிறது. அக்.4 மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.00 மணிக்கு சித்தர் வீதி உலா நடக்கிறது. அக்.5 காலை 4.30 மணி முதல் ஹோமம், 7.50 மணிக்கு கஜபூஜை, 9.00 மணிக்கு கோ பூஜை, 11.00 மணிக்கு அபிஷேக ஆராதனை, 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மதுரை- ராமேஸ்வரம் சாலையில் 36 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்தனேந்தல். இங்கிருந்து பிரியும் சாலையில் ஒரு கி.மீ. தூரத்தில் இடைக்காட்டூர். அலைபேசி: 90254 25439, 99528 38531.

Leave a Reply