விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் “நான் சிகப்பு மனிதன்” டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களை அடுத்து இயக்குனர் திரு இயக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தயாராகும் இந்த படத்தினை விஷால் பிலிம் பேக்டரி, மற்றும் யூடிவி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. Narcolepsy என்ற தூக்க வியாதியால் அவதிப்படும் ஹீரோ விஷால் படும் அவஸ்தைகளை விறுவிறுப்புடன் திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் சமர்.