பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷால்-லட்சுமி மேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த “நான் சிகப்பு மனிதன்” படம், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. மேலும் படத்தின் சில காட்சிகள் அருவருப்பாக இருப்பதாகவும், குடும்பத்துடன் பார்க்க முடியாததாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன.
எனவே படக்குழுவினர் ஒருசில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர். நேற்று யூடிவி தனஞ்செயன், சமர், விஷால் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவின்படி “இதயம் உன்னை தேடுதே”என்ற பாடலையும், இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக்கில் வரும் ஒருசில காட்சிகளையும் நீக்க முடிவு செய்தனர். படத்தில் மொத்தம் 20 நிமிட காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
ஆனால் நாளை முதல் தெனாலிராமன் உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், டிரிம் செய்த நான் சிகப்பு மனிதன் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.