முதல்வரிடம் நடிகர் சங்கம் வழங்கிய வெள்ள நிவாரண நிதி

முதல்வரிடம் நடிகர் சங்கம் வழங்கிய வெள்ள நிவாரண நிதி

nasarசமீபத்தில் சென்னையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் திரையுலகை சேர்ந்தவர்கள் ஏராளமான தொகையை வழங்கினர். இந்த தொகை மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 25ஆயிரம் வரை சேர்ந்தது என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் நடிகர் சங்கத்தின் மூலம் வசூல் செய்த தொகையை அளித்தனர்.

மேலும் இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் சில கோரிக்கை வைத்ததாகவும், அந்த கோரிக்கை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Chennai Today News: Nadigar Sangam office-bearers handed over flood relief fund 1 Crore 10 lakhs to TN CM Jayalalitha!

Leave a Reply