விஷாலின் வேண்டுகோளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்பார்களா?
தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை தயாரித்து வெளியிட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் திருட்டு விசிடி பிரச்சனையையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
படம் நல்ல ரிசல்ட்டை கொடுத்தால் கூட திருட்டு விசிடி தாராளமாக புழங்குவதன் காரணமாக முதலீடு போட்ட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் தனியார் பேருந்துகளிலும் தற்போது புதிய படங்களை ஒளிபரப்பி திரையுலகினர்களுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கின்றனர். சமீபத்தில் தெறி, மனிதன், 24 ஆகிய படங்களை ஒளிபரப்பிய பேருந்துகளின் ஓட்டுனர்களை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது விஷால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘தெறி’ படம் பார்க்க தியேட்டருக்கு போக வேண்டாம். பஸ்ல போனா போதும்