நாகலாந்து பாணியில் நிர்பயா குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும். சிவசேனா

shivsenaபாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகலாந்து இளைஞர் ஒருவர் சிறையிலேயே பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் இதே தண்டனையை டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கும் வழங்கவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான  சாம்னா என்ற பத்திரிகையில் வெளியான தலையங்ம் ஒன்றில், “நாகலாந்தில் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடு.

டெல்லியில் கடந்த 2012-ல் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்க வேண்டுமோ, அதைத்தான் நாகாலாந்து மக்கள் பரீத் கானுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சட்டம் தன் கடமையை செய்திருந்தால், மக்கள் அந்த நபரை அடித்து, உதைத்து கொலை செய்திருக்கமாட்டார்கள். ஒரு அப்பாவி பெண் பலாத்காரம் செய்யப்படும்போது சட்டம் – ஒழுங்கு நிலையைப் பற்றிக் கவலைப்படாத அரசு, குற்றம்சாட்டப்பட்டவர் கொலையானபோது மட்டும் சட்டம், ஒழுங்கு பற்றி கவலைப்படுகிறது.

 நாகாலாந்து சம்பவத்தில், மக்கள் ஏன் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என்பதன் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து தாலிபன் பாணியில் தாக்குதல் நடத்தியிருப்பதாக விமர்சிக்கக்கூடாது” இவ்வாறு அந்த தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply