சமந்தா காதலரின் தம்பி திருமணம் திடீர் நிறுத்தம்
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா திருமணம் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில் நாகசைதன்யாவின் சகோதரரும் நடிகருமான அகில் திருமணம் விரைவில் நடக்கவிருந்தது. இந்த திருமணத்திற்கு தேதி குறித்து அழைப்பிதழ்களும் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த திருமணம் நிறுத்தப்படுவதாக நாகார்ஜூனா மற்றும் பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
அகில் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் திருமணம் என்ன காரணத்திற்காக நிறுத்தப்பட்டது என்பது குறித்து இருவீட்டாரும் தகவல்கள் கூறவில்லை. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடக்கவிருந்த இந்த திருமணத்திற்காக அழைப்பிதழ் அனுப்பிய அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு இருவீட்டார் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை இருவீட்டார்களும் மெளனம் கலைத்தால்தான் தெரியவரும்