பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சில்மிஷம் செய்த தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் இன்று காலை 10 மணியளவில் நடிகை நக்மா, தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் ஏற முயன்றார். அப்போது, நக்மாவை அருகில் சென்று காண நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் முயற்சி செய்து அவரது அருகில் வர முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருவர் நக்மாவிடம் சில்மிஷ செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை நக்மா, சில்மிஷம் செய்த காங்கிரஸ் தொண்டரை பளாரென கன்னத்தில் அறைந்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். ஆனால் மீரட் காங்கிரஸ் தலைவர் இதுகுறித்து கூறும்போது, ‘நக்மாவிடம் யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று கூறினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1jBPxr4″ standard=”http://www.youtube.com/v/QBhziX0tAiI?fs=1″ vars=”ytid=QBhziX0tAiI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4569″ /]