அரை நிர்வாண செல்ஃபிக்கு தடை விதித்துள்ள தாய்லாந்து அரசு இந்த தடையை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
செல்போன்கள் மூலம் தங்களை தாங்களே ‘செல்ஃபி’ எடுத்து கொள்ளும் மோகம் தற்போது உலகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அப்படி ‘செல்ஃபி’ எடுப்பவர்கள், அதை சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது நண்பர்களுக்கும், பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த செல்ஃபி மோகத்தில் உச்சகட்டமாக சில பெண்கள் ஆபாசமாக தங்களை தாங்களே நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் படம்பிடித்து இண்டர்நெட்டில் வெளியிடுவதால் பெரும் சர்ச்சை ஏற்படுகிறது. இந்த பழக்கம் தாய்லாந்து நாட்டில் மிக அதிகமாக பரவி வருவதால் இதை கட்டுக்குள் கொண்டு முடிவு செய்த தாய்லாந்து அரசு, அரைநிர்வாண செல்பி எடுப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் அதிரடி தடையால் தற்போது அங்கு செல்பி எடுக்கும் பழக்கமே குறைந்துவிட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் தற்போது செல்பி புகைப்படங்கள் அதிகளவு பதிவு செய்யப்படுவது இல்லை என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.