நளினியை விடுவிக்க தமிழக அரசு மறுத்தது ஏன்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்பா 7 பேர்களை முதல்வர் ஜெயலலிதா விடுவிக்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படும் நிலையில் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் நேற்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது. இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.