சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல்முறையீடு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல்முறையீடு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இந்த சம்மனுக்கு எதிராக நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவியும் மூத்த வழக்கரிஞருமான நளினி சிதம்பரம் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானதற்காக ரூ.1 கோடி வழக்கறிஞர் கட்டணமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள்.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவரது மனு கோரிக்கை ஏற்கப்படவில்லை. புதிய சம்மன் அனுப்ப தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் கடந்த மாதம் அனுப்பியது. 

Leave a Reply