ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் திடீர் தலைமறைவு: என்ன காரணம்?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் திடீரென தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை தனிப்படை போலீசார் கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்ததாகவும் வெளியாக தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த நிலையில் விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். சிலமணி நேரம் தலைமறைவாக இருந்த விஜய நல்ல தம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.