உரக்க சொன்ன உச்ச நட்சத்திரம்: ரஜினிக்கு அதிமுக நாளேடு பாராட்டு:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் கல்வியின் தரம் மற்ற மாநிலங்களை விட நன்றாக இருப்பதாகவும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார். இதற்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ரஜினிக்கு நன்றி கூறியிருந்தார்
இந்த நிலையில் அதிமுக நாளேடான ‘நமது அம்மா’ ரஜினியை பாராட்டி கட்டுரை ஒன்றை பிரசரித்துள்ளது. உரக்க சொன்ன உச்ச நட்சத்திரம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் ரஜினி போன்ற் உச்ச நடிகர்களின் பாராட்டு இந்த அரசுக்கு மேலும் ஊக்கம் தரும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினியை பாஜகவும், அதிமுகவும் வளைக்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் ‘நமது அம்மா’வின் இந்த கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.