‘நமது எம்ஜிஆர்’க்கு போட்டியாக ‘நமது அம்மா’: அதிமுகவினர் திட்டம்?
நேற்று சென்னை அதிமுக அலுவலகத்தில் கூடிய எம்.எல்.ஏக்களின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு என செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் அதிமுகவுக்கான பிரத்யேகமாக தொலைக்காட்சிக்கும் ‘நமது அம்மா’ என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் உள்ள நிலையில், புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.