ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம். அரசியலில் குதிப்பாரா?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர். இன்னும் ஒருசிலர் அரசியல் கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கவர்ச்சி நடிகை நமீதா அரசியல் குதிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் அதிமுகவில் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நமீதா தன்னுடைய கடிதத்தில், ” ”நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது.
சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு நமீதா தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.