தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரபல நடிகை மறுப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினகரனின் தொப்பி சின்னத்திற்காக வாக்கு கேட்டு சென்ற முன்னாள் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு பரிசாக அழுகிய தக்காளி கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சம்பவத்திற்கு பின்னர் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்களும், நடிகர், நடிகைகளும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக நடிகை நமிதா மற்றும் விஜயசாந்தி பிரச்சாரம் செய்ய மறுத்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தற்போது ஆர் கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தினகரனுக்கு ஆதரவாக நடிகை நமிதா மற்றும் விஜயசாந்தியை பிரச்சாரம் செய்ய அழைத்தும், அவர்கள் வர மறுத்து விட்டனர்
சசிகலா அதிமுகவின் பொறுப்பேற்ற போது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர் நடிகை விஜய சாந்தி. அதுமட்டுமின்றி தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். அதேபோல் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் இணைந்தவர் நடிகை நமிதா.
நமிதா மற்றும் விஜயசாந்தி அதிமுக., பக்கம் இருந்ததால், தற்போது நடக்க உள்ள இடைத்தேர்தலுக்கு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் விஜயசாந்தி இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றாராம். அதே போல் நமிதா அதெல்லாம் வரமுடியாது என மறுத்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.